வீரதமிழர் முன்னணி

பாண்டியர்கள்

பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.

பாண்டியதேசம் சோழதேசத்திற்குத் தெற்கிலும், சேரதேசத்திற்குக் கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும். இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருடகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த கருநாடக தேசத்தில் யதுகிரி, செகயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி பாண்டிய தேசத்தை செழிக்க வைக்கின்றது. தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது இந்த பாண்டிய தேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றன. காவிரிநதிக் கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தவை.

  • தலைநகரம் முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
    இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை
    பிற்காலப் பாண்டியர்: மதுரை
    தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி,கருவை
    பேசப்படும் மொழிகள் தமிழ்
    சமயம்: சமணம், வைணவம், சைவம்
    அரசாங்கம் முடியாட்சி வேந்தர்

    • பொ.ஊ. 575 – 600 கடுங்கோன்
    • பொ.ஊ. 900 – 945 மூன்றாம் இராசசிம்மன்
    • பொ.ஊ. 1216-1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
    • பொ.ஊ. 1268-1311 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

    வரலாற்று சகாப்தம் சங்க காலம், மத்திய காலம்

    • தொடக்கம் பொ.ஊ.மு. 6ஆம் நூற்.
    • முதலாம் பாண்டியப் பேரரசு பொ.ஊ. 575 – பொ.ஊ. 945
    • இரண்டாம் பாண்டியப் பேரரசு பொ.ஊ. 1216
    • முடிவு பொ.ஊ. 1600[4]