ஐந்திணை நிலங்களின் வாழ்வியல் தெய்வம்
பைந்தமிழ் மாந்தர் பகுத்ததைத் தொடர்வோம்
தமிழர்க்கு மறைநூல் திருக்குறள் என்போம்
தமிழமே தமிழ்க்குடித் தாங்குதல் காண்போம்
முன்னவர் நடுகல் ஆனதை விதைப்போம்
மண்பகை இங்குற முருகனைத் துதிப்போம்
மாயோன் இந்திரன் வருணனைத் தொழுவோம்
வென்றிட கொற்றவை மக்களாய் எழுவோம்
செறுக்குடன் தமிழ்க்கொடி ஏற்றியே மகிழ்வோம்
சிறப்புடன் தமிழ் வழிபாட்டினை ஏற்போம்
தடைகளை நொறுக்கியே தமிழுடன் எழுவோம்
கடலென முழக்கியே களத்தினில் வெல்வோம்
நற்றமிழ்ப் பாவலர் தனித்தமிழ்வேங்கை
மறத்தமிழ்வேந்தன்
வையத்தலைமை கொள்வோம்!
வாஞ்சையோடுத் தாய் மண்ணைக்காப்போம்!
அன்னைத்தமிழ் மொழி அழியாது மீட்போம்!
வான்புகழ் கொண்ட வள்ளுவன் வழி ஏற்போம்!
இக்கொள்கை வழி நின்ற மறவர்க்கு, வென்று புகழ் சேர்ப்போம்!
வீரத்தமிழர் முன்னணி, வெல்வது ஒன்றே முதல்பணி!
வீறுகொண்டு எழுவோம், வெற்றிகண்டு மகிழ்வோம்!
இயற்கை எங்கள் வழிபாடு, மூத்தோர் எங்கள் தெய்வங்கள்!
தமிழே எங்கள் மொழியாகும், தமிழர் எங்கள் குடியாகும்!
குறளே எங்கள் நெறியாகும், தமிழம் எங்கள் வழியாகும்!
நாம் தமிழர், நாமே தமிழர்.