வீரதமிழர் முன்னணி

நோக்கம்

வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா ஈட்ட நோக்கமற்ற அமைப்பு (NPO) தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, மெய்யியல் மீட்சிக்கான சேவைகளை அமெரிக்காவாழ் தமிழர்களிடம் வழங்கி வருகிறோம்.

தொலைநோக்கு விளம்பறிக்கை (Vision Statement)

அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே  மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மெய்யியல் மற்றும் வழிபாட்டு முறைகளை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாத்தல்.

செயல் இலக்க விளம்பறிக்கை (Mission Statement)

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, தீந்தமிழ் வாழ்வியல் மற்றும் இறை வழிபாட்டு முறைகளை கற்பிக்கவும், செயல்படுத்தவும், அவர்தம் வாழ்வைச் செம்மைப்படுத்தவும், தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும், தமிழர் சமயச் சான்றோர்களைப் போற்றவும் தேவையான எளிய கட்டமைப்பை உருவாக்குதல். 

வீரத்தமிழர் முன்னணி சேவைகள்
  • வகுப்புகள்: திருக்குறள், திருமுறை, தேவாரம், திருவாசகம், பறை, சிலம்பம், திருமூலர் ஓகம்   கற்பித்தல். ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டு வாசிப்பு. 
  • வழிபாடுகள்: இல்லங்களில் தமிழ் முறைப்படி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு நடத்துதல்.  
  • தமிழர் மெய்யியல் மீட்சி: தமிழர்களின் மெய்யியல், தமிழர் கடவுள் மீட்பு, திருக்கோயில்களின் தமிழ் மூலப் பெயர்களை மீட்டெடுத்தல். 
  • தமிழர் பண்பாடு : தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழர் மரபுவழி, பண்பாடு, மற்றும் மொழியை பாதுகாத்தல்.
  • வேல்வீச்சு இதழ்: உறுப்பினர்களுக்கு வேல்வீச்சு மின்னிதழை வழங்குதல்.