தமிழ் முறை வழிபாடுகள்
திருக்கோயில்கள் வழிபாடு/பூசைகள்
கோயில்கள்: தமிழர் வழிபாடுகளில் கோயில்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேலும் தமிழ் முறை வழிபாடுகளை முன்னிறுத்துகின்றன.
வழிபாடு முறைகள்: முருகன், அம்மன், சிவன், மற்றும் குலதெய்வங்களை வழிபடுவது.
இயற்கை வழிபாடு
நிலம், நீர், காற்று, மழை, காடுகள், மலை, ஆறு, கால்நடைகள் போன்றவை தமிழர் வழிபாடுகளில் முக்கிய பங்குகளை வகிக்கின்றன.
மறைமதி (அமாவாசை) மற்றும் முழுமதி (பவுர்ணமி) வழிபாடு
மறைமதி: முன்னோர்களை நினைத்து மறைமதி அன்று நிலைபேறு (திதி) மற்றும் தர்ப்பணம் செய்து வணங்குதல்.
முழுமதி: முழுமதி நாளன்று தங்களது குலதெய்வங்களை வழிபடுதல்.
மஞ்சள், வாழை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், மலர் மற்றும் துளசி
மஞ்சள், வாழை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், மலர், மாயிலை மற்றும் துளசி இவைகள் அனைத்தும் தமிழ் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
பாடல்கள் மற்றும் வாத்தியங்கள்
தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், இவை தமிழ் வழிபாடுகளில் பாடப்படுகின்றன.
வாத்தியங்கள்: தவில், நாயனம், பறை வாத்தியங்கள் வழிபாடு மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.
பண்டிகைகள்
பொங்கல், கார்த்திகை தீபம், மற்றும் ஆடி அமாவாசை: இவை அனைத்தும் தமிழர் பாரம்பரியத்தில் அடிப்படையாகக் கொண்டவை.